பார்க்கவகுல மூப்பனார் (சுருதிமார்) சமூக நல அமைப்பு என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தஞ்சாவூரில் 11-02-2023 அன்று நமது இன சொந்தங்கள் கலந்து கொன்ட ஒரு கூட்டமே துவக்கமாக அமைந்தது. இதில் எட்டு உறவினர்கள் கலந்து கொண்டனர்.பிறகு துவங்கப்பட்ட “சுருதிமார் சொந்தங்கள்” என்ற வாட்சப் குழுவின் மூலம் அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் உறவினர்கள் எண்ணிக்கை அதிகமானது.(தற்போது இந்த வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயர்ந்து தற்பொழுது 1000 ஐக் கடந்துள்ளது) .
அடுத்தடுத்து நடந்த கூட்டத்தில் நமது மூப்பனார் இனத்தை தமது பெயராலேயே உலகறிய செய்த சுயநலமற்ற ஒப்பில்லா தலைவரும் அகில இந்திய அளவில் அனைத்து கட்சி பிரமுகர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவர்மான.ஐயா G.K.மூப்பனார் அவர்களின் திரு உருவம் கொண்ட லோகோ அறிமுகப்படுத்தப் பட்டது
நமது சமுதாய முன்னேற்றத்திற்கென்று ஒரு வலுவான அமைப்பு வேண்டும் என்ற சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட எண்ணற்ற உறவுகளின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நமது அமைப்பின் சார்பில் கந்தசரஸ் திருமண மண்டபத்தில், 2022-23 கல்வியாண்டில் 10ம் வகுப்பு & 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா சீரும் சிறப்புமாக நடை பெற்றது. விழாவில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ( ஸ்டேட் போர்டு மற்றும் சிபிஎஸ்சி ) ஆகிய நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்,. விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கேடயம், சான்றிதழ், காலேஜ் பேக் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த விழா நடைபெறுவதற்கு நமது சமூக ஆர்வலர்கள்/பெரியவர்கள் பெருமளவில் நன்கொடை வழங்கினார்கள். நமது சமூக தொழிலதிபரும் கந்தசரஸ் திருமண மண்டபம் மற்றும் Best Schools உரிமையாளருமாகிய திருமதி.கலையரசி முருகேசன் அவர்கள் விழா நட்த்துவதற்காக திருமண மண்டபத்தை இலவசமாக(வாடகை இன்றி) வழங்கி உதவினார்கள். நமது சமூக முன்னோடிகள்/பேராசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள் . ஐயா திரு.S.சுரேஷ் மூப்பனார் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஐயா திரு. M.செல்வம் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசியது விழாவில் முத்தாய்ப்பாக அமைந்தது. அனைவரின் ஆதரவுடன் முதல் விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
நமது சமுதாய மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களின் தொழில் வளர்ச்சி, சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்கான சுயவளர்ச்சி சிந்தித்து செயல்படுவது. தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற கூற்றுக்கேற்ப நமது சமூகத்தினரிடையே ஒற்றுமை ஏற்பட பாடுபடுவது.
- இது ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பு
- ஆண்டு தோறும் 10 & 12ம் வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசளிப்பு விழா நடத்துவது.
- ஏழை எளிய மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்வது.
- படிப்பை முடித்த/வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவி புரியும் நிலையில்/பதவியில் உள்ள நமது சமூகத்தினர் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்வது.
- திருமணத்துக்கான வரன் தேடுவோருக்கு உதவி செய்வது.
- கிராம/மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுவும்,தலைமை ஒருங்கிணைப்பு குழுவும் அமைத்து அனைத்து வகையிலும் நமது நோக்கம் நிறைவேற பாடுபடுவது.
- நமது அமைப்பின் சார்பில் ஒரு அறக்கட்டளை அமைப்பது.